மேலும் அறிய
Advertisement
மதுரை: ''ஸ்விகி, ஜோமேட்டோ ஆப்களை விட காவல் செயலி ஒவ்வொரு மாணவிக்கு முக்கியம்" - போலீஸ் அட்வைஸ்
’வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்விகி, ஜோமடோ போன்ற செயலிகளை விட காவல் செயலி ஒவ்வொரு மாணவிக்கு முக்கியம்’ - மதுரை போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி பேச்சு.
மதுரை மாநகர் காவல், மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அவனியாபுரத்தில் உள்ள சேர்மத்தாய் வாசன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
"வாட்ஸ் அப், பேஸ்புக், ஜோமடோ, ஸ்விக்கி போன்ற செயலிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் காவல் செயலையும் முக்கியமே" - மதுரை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தங்கமணி தெரிவித்தார்.#Madurai | @maduraipolice | #thangamani | @MaduraiPhone | @MaduraiEmerging @jp_muthumadurai @UpdatesMadurai pic.twitter.com/ISIBIj0jBy
— Arunchinna (@iamarunchinna) July 29, 2022
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கலந்து கொண்ட சிறப்பு உரையாற்றினார் அப்போது வாட்ஸ் அப், பேஸ்புக், ஜோமடோ, ஸ்விக்கி போன்ற செயல்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் காவல் செயலையும் முக்கியமே என்றார்.
தொடர்ந்து இதில் கொடுக்கப்படும் மாணவிகளின் தகவல்கள் எக்காரணம் கொண்டும் பரிமாறப்படாது முற்றிலும் பாதுகாப்பானது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயனாளர் தங்களுக்கு மூன்று நெருக்கமான உறவுகளை அதில் பதிந்து வைத்து கொண்டு உங்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் போது அது உங்களுக்கு நெருக்கமான உறவுகளுக்கும் மற்றும் அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் சென்று விடும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: 21 கிலோ கஞ்சா கிடைத்தும் ஆதாரம் இல்லை.. விடுதலையான நபர் - போலீஸ் மீது நடவடிக்கை!
இது முற்றிலும் பெண்கள் காவல்துறையிறனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனது மாணவிகள் அச்சப்பட வேண்டியதில்லை. என காவல் செயலி குறித்த விழிப்புணர்வு குறித்து மதுரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் தங்கமணி அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின் மாணவிகளுக்கு பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion