மதுரை: 21 கிலோ கஞ்சா கிடைத்தும் ஆதாரம் இல்லை.. விடுதலையான நபர் - போலீஸ் மீது நடவடிக்கை!
21 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த வடிவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து மதுரை இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இரு பைகளில் சுமார் 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த வடிவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து மதுரை இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் வழக்கை முறையாக நடத்தாதற்காக அப்போதைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மீது 6 மாதத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டார்
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாலுகா வண்ணார்பேட்டையைச் சேர்ந்த வடிவேல்(60) என்பவர் விற்பனை செய்வதற்காக இரு பைகளில் சுமார் 21 கிலோ கஞ்சா வைத்திருந்தபோது கடந்த 4.4.2019ல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மதுரை இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.
வடிவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் வழக்கை முறையாக நடத்தாதற்காக அப்போதைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மீது 6 மாதத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.