Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்களை வர்ணித்து சர்ச்சையில் சிக்குவதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது யாரை புகழ்ந்துள்ளார் தெயுமா.? நீங்களே பாருங்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரி விதிப்பது, போர்களை நிறுத்துவதில் மட்டும் பிசி அல்ல, மற்றொரு பணியிலும் சத்தமில்லாமல் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆம், அவ்வப்போது பெண்களின் அழகை வர்ணிப்பதையும் அவர் ஒரு வேலையாக வைத்துள்ளார். ஏற்கனவே, இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்து சர்சையில் சிக்கிய அவர், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த முறை அவர் யாரை வர்ணித்தார் என்று பார்ப்போம்.
வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலினை வர்ணித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்ணனையில் இந்த முறை சிக்கியவர், அவரது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தான். பென்சில்வேனியாவில் நடந்த பேரணி ஒன்றில், தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, செய்திக்கு மாறாக, தனது 28 வயது பத்திரிகை செயலாளர் எவ்வளவு "சிறந்தவர்" என்று அவர் கூறினார்.
"இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவங்க நல்லவங்க இல்லையா? கரோலின் நல்லவரா?" என்று அவர் ஆரவாரம் செய்த கூட்டத்தினரிடம் கேட்டார். பின்னர் அவர் தன்னை விட 50 வயதுக்கு மேற்பட்ட இளையவரான லீவிட்டின் உடல் தோற்றத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டினார்.
"உங்களுக்குத் தெரியும், அவள் தொலைக்காட்சியில் வரும்போது, அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்... அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் அங்கு தோன்றும்போது," என்று ட்ரம்ப் கூறினார். மேலும், "அவளுக்கு எந்த பயமும் இல்லை... ஏனென்றால் எங்களிடம் சரியான கொள்கை உள்ளது என்றும் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
Trump praised Karoline Leavitt: ‘When she goes on FOX, she dominates her lips go bop bop bop like a little machine gun, and she fears nothing because we have the right policy.’ pic.twitter.com/3rzHAWBAdP
— 🇺🇸RA🇺🇸 (@RanaAmjad583030) December 10, 2025
அவர் கரோலினை வர்ணிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு நேர்காணலின் போது, ட்ரம்ப் அவரைப் பற்றி இதே போன்ற கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதாவது, "அந்த முகம்தான் அது. அந்த மூளைதான் அது. அந்த உதடுகள்தான், அவை நகரும் விதம். ஒரு இயந்திர துப்பாக்கியைப் போல அவை நகரும்," என்று அப்போது லீவிட்டைப் பற்றி கூறியிருந்தார்.
மேலும், "கரோலினை விட சிறந்த பத்திரிகை செயலாளர் யாருக்கும் இருந்ததில்லை என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் தற்போதும் ட்ரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இத்தாலி பிரதமர் மெலோனியை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்
இதேபோல, சமீபத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடம், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே.?, உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று ட்ரம்ப் வர்ணித்து பேசியது சர்ச்சையானது. அதோடு, இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்து போயிருக்கும் என்றும் ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















