முருக பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் திருநங்கைகள் மீது குண்டர் சட்டம் பாயும்
’’திருநங்கைகள் தங்களுக்கு தெரிந்த தொழில்கள் மற்றும் வேலைகள் குறித்து தெரிவித்தால் அரசிடம் பரிந்துரை செய்து தொழிற்கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி உறுதி’’
பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள் குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும் என திருநங்கைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை தொந்தரவு செய்யும் நோக்கில் ஏராளமான திருநங்கைகள் கூடி தர்மம் என்ற பெயரில் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. திருநங்கைகளின் இச்செயல் பொதுமக்களிடையே முகச்சுளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் இதில் தலையிட வேண்டும் என தொடர்ந்து பழனிக்கு வரும் முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கமிஷன் கிடைப்பதால் பொங்கல் பரிசு பொருட்கள் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிபதிகள் கேள்வி
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு உள்ளரங்க கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்காண திருநங்கைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிப்பது குற்றமாகும். பக்தர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெறாமல் அவர்களை மிரட்டி அதிக பணம் பிடுங்குவதாக தொடர் புகார்கள் வருவது கவலையை ஏற்படுத்துகிறது.
எனவே பழனிக்கு வரும் பக்தர்களை திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு மிரட்டும் வகையில் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பக்தர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் குற்றத்தில் ஈடுபடும் திருநங்கைகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார். மேலும் திருநங்கைகள் தங்களுக்கு தெரிந்த தொழில்கள் மற்றும் வேலைகள் குறித்து தெரிவித்தால் அரசிடம் பரிந்துரை செய்து தொழிற்கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும்,
Pongal 2022 : பாரம்பரிய மண்வாசனை..பொங்கல் நாள் ஒளி.. மண்பானை உணவின் நற்பலன்கள் தெரியுமா?
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
எனவே பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் செயலை திருநங்கைகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், பழனியில் வசிக்கும் திருநங்கைகள் தவிர சீசனுக்காக பழனி வந்து தங்கி பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழனி டிஎஸ்பி சத்யராஜ், நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்