Crime: ஷாக்! மதுபோதை மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த தாய் - எங்கு நடந்தது?
மது போதையில் வீட்டிற்கு வந்த சிவசாமி, தாயுடன் வழக்கம் போல தகராறில் ஈடுபட்டதுடன் தாயை தாக்க முற்பட்டு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.
போதைப் பொருள் காரணமாக குற்றங்கள்
மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் காரணமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
மது போதையில் தகராறு:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் சிவசாமி, இவருக்கு விவாகரத்து ஆகி தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையாகி தினசரி மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை சேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் தொடர்ந்து மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.