மேலும் அறிய
Advertisement
மதுரையில் விஷப்பூச்சி கடித்து மாணவன் உயிரிழப்பு - பள்ளி மீது பெற்றோர் குற்றச்சாட்டு
மேலூர் அருகே பள்ளியில் இருந்த போது 8 ஆம் வகுப்பு மாணவனை விஷப்பூச்சி கடித்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்த பூமங்கலப்பட்டியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் - சுமங்கலி தம்பதியின் மகன் நிதிஷ் மகள் அபிநயா ஆகிய இருவரும் அருகிலுள்ள கொட்டாம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். நிதிஷ் 8- ம் வகுப்பு பயின்று வருகின்றான்.
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே பள்ளியில் இருந்த போது 8 ஆம் வகுப்பு மாணவனை விஷப்பூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#madurai |@melur |@crime @abpnadu
— Arunchinna (@iamarunchinna) July 3, 2022
இந்நிலையில், கடந்த 22- ம் தேதி பள்ளியில் இருந்த போது தார்பாயை அப்புறபடுத்தியபோது விஷபூச்சி ஒன்று மாணவன் நிதிஷை கடித்துள்ளது. இதனையடுத்து மாணவனை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 10 நாட்களாக நிதிஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனவும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - High Court Order: அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பின்னர் மேலூர் உட்கோட்ட டி.எஸ்.பி பிரபாகரன் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தகவல் அளித்தார். பள்ளிக்கு பயில சென்ற மாணவன் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் கொட்டாம்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் உயிரிழப்பு தொடர்பாக முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion