(Source: ECI/ABP News/ABP Majha)
5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - தேனியில் ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது
’’தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் சென்ற மாதம் மாத ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஓரிலக்க எண்ணாக இருந்தது, மாத கடைசியில் இரண்டு இலக்க எண்ணாக மாறியது. மீண்டும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதம் ஆரம்பத்தில் குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டு இலக்க எண்ணாக மாறியுள்ளது. இந்த மாத ஆரம்பத்திலிருந்து தற்போது வரை இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் தடுப்பூசி போட்டு கொள்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்களின் வசதிக்காக மாவட்டங்களில் பல்வேறு நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள், பேருராட்சி அலுவலகங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே மாவட்டம் தோறும் 4 கட்டங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. தற்போது நேற்று 5 ம் கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் சுமார் 400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் என நடந்த முகாம்களில் மக்கள் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 808 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 23 ஆயிரத்து 542 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 6 லட்சத்து 13 ஆயிரத்து 819 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 284 பேரும் செலுத்திக் கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
இன்று கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!