மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1059 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தி யோருக்கு பிஸ்கட், சேமியா பாக்கெட்கள். துணிக்கடை தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட்டன.
1. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் பச்சை நிறமாக கடல்நீர் மாறியதால், ரசாயனம் கலந்திருக்குமோ என மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
2. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மீன் கடைகளில் 10 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு பிஸ்கட், சேமியா பாக்கெட்கள், துணிக்கடை தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட்டன.
4. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள உணவகத்தில் பெண்ணை கேலி செய்து. கணவரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
5.திருநெல்வேலி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் தரையில் படுத்து துாங்கினார். இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
6. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்க அழைத்து சென்ற கைதிகள் இருவர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவிலில் தப்பினர், அவர்களில் ஒருவர் சிக்கினார்.
7. தேனி மாவட்டம், உப்பக்கோட்டை காமராஜபுரத்தில் பகுதியை சேர்ந்த நாயின் உரிமையாளர்கள் தங்களது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8. மதுரையில் மெகா தடுப்பூசி முகாம்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு முதல் நாள் இரவு அல்லது அன்று காலை தகவல் தெரிவிக்கப்படுவதால் வீண் அலைச்சல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
9. மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடி பிரபாகரன் 24. கொலை முயற்சி வழக்கில் சிறையில் உள்ளார். ஏற்கனவே இரண்டு கொலை, ஒரு கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மதுரை எஸ்.பி., பாஸ்கரன் பரிந்துரைபடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
10. மதுரை செக்கானூாரணி அருகே கே.புளியங்குளத்தில் அரசு திருமண மண்டபம் அமைப்பதற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion