”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான் உரிய அழுத்தம் கொடுத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் பழங்காநத்தம் பகுதியில் திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களுக்கு அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்பி உதயகுமார், “வைகாசி விசாகத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் முதன்மை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பாதையாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருவதாகவும், அதேபோல் இந்தாண்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக” தெரிவித்தார்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதல் அமைச்சர் டி. கே. சிவக்குமார் அறிவித்தது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு
காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல தமிழ்நாட்டின் உயிர் பிரச்னையாகும், தமிழ்நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் டெல்டா விவசாய பகுதிகளுக்கு உயிர் ஆதாரமாக காவிரி நீர் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கர்நாடகா அரசாங்கம் முயற்சித்த போதும் கடந்த புரட்சித்தலைவி அம்மாவின் அரசும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசாங்கத்திலும் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆர்பி உதயகுமார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவையான உரிய நீர் பங்கிட்டை பெற்று தந்தது மட்டுமின்றி காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசின் அரசியலில் வெளியிடப்பட்டதாகவும், அதேபோல் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான் உரிய அழுத்தம் கொடுத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்வில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளான வெற்றிவேல், சாலை முத்து, மகாலிங்கம், ஆர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தன.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்