மேலும் அறிய
சசிகலா குறித்த கேள்வி... மலுப்பிய செல்லூர் ராஜு / ”ஓபிஎஸ் தற்போது அனாதையாக இருக்கிறார்” - கடும் தாக்கு !
2001 இல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது பாஜக தீண்டத்தகாத கட்சியாக தெரியவில்லையா? அரசியலில் அப்பப்ப அனைத்து மாறும். - செல்லூர் ராஜு பேட்டி.

செல்லூர் ராஜு
Source : whatsapp
பாஜக இருக்கும் இடம் தான் வளர்ந்து இருக்கிறது. பாஜக தான் நிறைய நிதிகளை தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கிறார்கள். - மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.
செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
மார்ச் 1ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில்...,” எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்வாகிகள் சில ஆலோசனைகள் என்னிடம் சொன்னார்கள். மார்ச் 1ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்ற உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக அமைய உள்ளது. அந்த கூட்டத்தில் நாம் எப்படி கலந்து கொள்வது என்பது குறித்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள.
மிகவும் கருணையோடு கேட்டேன்.
வரியை உயர்த்தி கொடுப்போம் என்றெல்லாம் சொல்லவில்லை. முதலமைச்சர் மதுரைக்கு வந்திருந்தார். மதுரையில் முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கக்கூடிய முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டம், மதுரையில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள், மதுரையில் உள்ள பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கொடுக்கப்படும் என்று தவறான தகவலை கொடுத்துவிட்டு. முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தில், பைப்புகள் வெடித்து தண்ணீர் வீணாக செல்கிறது. மதுரையில் உள்ள வைகை ஆறு புராண காலத்தில் தூய்மையான ஆறு. ஆனால் அது தற்போது கூவம் நதி போல் கழுவுநீராக உள்ளது. என்று மாநகராட்சி அதிகாரிகளை கூப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் மிகவும் கருணையோடு கேட்டேன்.
நானும் சட்டமன்ற உறுப்பினர் மதுரையில் வாழும் மக்களில் ஒருவனாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. 23, 24, 25 ஆகிய ஆண்டுகளில் கோடைகாலம் வந்தது அப்போது ஏன் நீங்கள் நிதி கொடுக்கவில்லை, என்று ஏன் நீங்கள் முதல்வரிடம் கேட்கவில்லை. எது மாதிரியும் இல்லாமல் இப்போது மட்டும் கோடை கால நிதி கொடுப்பதற்கு காரணம் என்ன என்று யாராவது கேட்டீர்களா?
பத்தாயிரம் கொடுக்கிறது நல்லது ஒவ்வொரு தாய்மாரும் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள்.
மதுரைக்கார ஊடகத்தினர் வீராப்பு மிக்கவர்கள் என்று சொல்கிறீர்கள் ஏன் முதலமைச்சரிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள்? ஜெயலலிதா பெண்களுக்கான திட்டங்களை கொடுத்தார், தொட்டில் குழந்தை திட்டம், கருவிலிருந்து கல்லறை செல்லும் வரை பெண்களுக்கான திட்டத்தை ஜெயலலிதா கொடுத்தார் விலையில்லா அரிசி கொடுத்தார். 78வது பிறந்தநாளில் மூன்றாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். பத்தாயிரம் கொடுக்கிறது நல்லது ஒவ்வொரு தாய்மாரும் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள். சசிகலா குறித்து நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன்.
பெங்களூர் சிறையில் அச்சுறுத்தல் இருக்கிறது என்று சசிகலா சொல்கிறாரே என்ற கேள்விக்கு?
சசிகலா குறித்து நான் வீடியோ பார்க்கவில்லை. கிராமத்தில் இருக்கிறேன் எங்கள் வீட்டில் இருக்கும் பாலம் தற்போது வரை கட்டி முடியவில்லை. வண்டி நிறுத்த முடியவில்லை. உங்கள் வீட்டிற்கும் வர முடியவில்லை. கிராமத்தில் இருக்கிறேன் நான். செல்போன் இருக்காது. ஹலோ ஹலோ சொல்லுவேன் டவர் கிடைக்காது. மலை அடிவாரத்தில் இருக்கிறேன்.
காலையில் பேப்பர் பார்க்கவில்லையா என்ற கேள்விக்கு?
காலையில் பேப்பர் பார்க்கவில்லை ,
தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவில் கேட்க மாட்டேன் பாஜகவில் தான் கேட்பேன் என்று தினகரன் சொல்லி இருக்கிறாரே என்பது குறித்த கேள்விக்கு?
இதை நீங்கள் தினகரனிடம் தான் கேட்க வேண்டும். எழுச்சி பெற்று இருக்கிறோம். விடிய ஆட்சியின் வீட்டு பில்லே சாட்சி. தமிழகத்தில் ஏகப்பட்ட இடங்களில் போய் கேட்கிறார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் பிரமாதமாக வரவேற்கிறார்கள்.
தென் தமிழகத்தில் ஓட்டு பிளவு படுகிறது என்ற கேள்விக்கு?
ஓட்ட ரெக்கார்டு போல பேசுகிறீர்கள். தேர்தல் என்பது வித்தியாசமானது. தேர்தலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவாக இருக்கிறார்கள். தென்மாவட்டங்களில் எல்லா இடங்களிலும் இதே எழுச்சி இருக்கிறது. மக்கள் எழுச்சியாக இல்லை என்றால் எங்கள் தொண்டர்கள் சோர்வாக இருப்பார்கள். எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பன்மடங்கு உழைக்கிறார். ஏறத்தாழ 200 தொகுதிக்கு மேல் மக்களை சந்தித்திருக்கிறார். செல்லும் இடங்கள் எல்லாம் கடல் அலை போல் மக்கள் கூட்டம். இதற்கு மேல் என்ன சான்று வேண்டும். அவர் பேசி முடிக்கும் வரை மக்கள் நிற்கிறார்கள் கைதட்டுகிறார்கள் வரவேற்கிறார்கள் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள்.
ஓபிஎஸ் தற்போது அனாதையாக இருக்கிறார்
ஓபிஎஸ் பேச்சை நீங்கள் பேசுகிறீர்கள். ஓபிஎஸ் தற்போது அனாதையாக இருக்கிறார். அவருடன் தற்போது யாருமே இல்லை. ஓபிஎஸ் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்று ஊடகத்தினர் நீங்களே செய்தி போடுகிறீர்கள். இப்படிப்பட்ட ஆளை ஜெயலலிதா பதவி கொடுத்து முதலமைச்சராகி சட்டமன்ற உறுப்பினராக்கி நிதி அமைச்சர் ஆக்கி உள்ளார்களே என்று கேட்டேன். எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் இன்னும் நூறாண்டு காலம் இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னார். மக்களுக்காக இந்த இயக்கம் பணியாற்றும் என்று ஜெயலலிதா சொன்னார்.
ஓபிஎஸ் மீது தவறே இல்லை என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு?
பாஜக இருக்கும் இடம் தான் வளர்ந்து இருக்கிறது. பாஜக தான் நிறைய நிதிகளை தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கிறார்கள். 2001 இல் கூட்டணி வைத்தார்கள். அப்போது பாஜக தீண்ட தகாத கட்சியாக தெரியவில்லையா?
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























