போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு - 39 பேர் நேரில் ஆஜர்
39 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிலருக்கு போலி ஆவணங்கள் மூலம் 53 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கியூ பிரான்ஞ் போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கோரியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது இதனையடுத்து கீழமை நீதிமன்றம் மூலமாக விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
#Abpnadu | போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு - 39பேர் நேரில் ஆஜர் - வழக்கு அக்டோபர் -28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
— arunchinna (@arunreporter92) September 30, 2022
Further reports to follow @abpnadu#madurai | #maduraicourt @jp_muthumadurai | @hari_rs_jo | @com_maruthaiyan | @PrakashPandianP | . pic.twitter.com/ajeUsFRIe3
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்