மேலும் அறிய

இன்று முதல் வந்தது அமல்.. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடையாம்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள மூலவர் சிலை, போகர் சித்தரால் நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது. பழனிக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க பழனி கோவிலில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்து வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.. துருக்கியில் உச்சக்கட்ட பரபரப்பு.. பயங்கரவாதிகள் நாசசெயல்

இன்று முதல் வந்தது அமல்.. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடையாம்!

குறிப்பாக மூலவர் சன்னதியில் செல்போன், கேமரா கொண்டு படம் எடுக்க தடை உள்ளது. ஆனாலும் சிலர் செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம்  அவ்வப்போது நடந்து வருகிறது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை  உயர் நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த  நீதிமன்றம் பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகமும், சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அப்போது அக்டோபர் 1-ந்தேதி முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டுவர தடை எனவும், படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்கள் வாங்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் எனவும் அறிவித்தது.

CM Stalin: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இன்று முதல் வந்தது அமல்.. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடையாம்!

இந்த அறிவிப்பை தொடர்ந்து பாதவிநாயகர் கோவில் பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் செல்போன் 'ரேக்கு'கள் அமைக்கபப்ட்டு இன்று  முதல் பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை அமலுக்கு வந்துள்ளது. அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் கூறும்போது, பழனியில் ரோப்கார், மின்இழுவை ரயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பக்தர்களிடம் செல்போன் வாங்கி வைப்பது, கொடுப்பது அப்போது பின்பற்ற வேண்டியது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்காக 5 ஆயிரம் பைகள் வாங்கப்பட்டு உள்ளன. குழுவாக வரும் பக்தர்களின் செல்போன்கள் ஒரே பையில் வைத்து 'ரேக்கில்' பாதுகாக்கப்படும் என்றனர்.

New York Flood: இரவோடு இரவாக பெய்த கனமழை; மிதக்கும் நியூயார்க் நகரம்... கலக்கத்தில் பொதுமக்கள்!

இன்று முதல் வந்தது அமல்.. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடையாம்!

பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை என்பது வரவேற்பை பெற்றிருந்தாலும், சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டு உள்ளன. அதாவது அடிவாரத்தில் அல்லாமல் மலைக்கோவிலில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைத்தால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதேபோல் பழனி முருகன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget