அதிமுக 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பில்லை! அமைச்சர் ஐ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
திமுகவை பொறுத்தவரை எங்களது தலைவர் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நிரந்தரமான திட்டத்தை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்துவார்கள் .

திண்டுக்கல் மாவட்டத்தில் கல் நாட்டான்பட்டி, சீவல் சரக்கு நெசவாளர் காலனி, அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம் மாதா நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை திறந்து வைத்த ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,

வரும் தைத்திருநாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு,இதற்கு முதலமைச்சர் முடிவெடுப்பார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார் மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்.
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் அது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,
210 தொகுதியிலும் இடம் இல்லை அவருக்கு 210 தொகுயிலும் அவர் போட்டியிட இடம் இல்லை. அவருக்கு, அதிமுக போட்டியிட 210 தொகுதி எங்கு இருக்கிறது. பட்டியல் வெளியிட்டார்களா? பட்டியிலே வெளியிடவில்லையே அவரது கூட்டடணி கட்சி என்று கூறுகிறீர்களா? 210 தொகுதியில் மீதம் 24. தொகுதி உள்ளது 24 தொகுதியில் வேண்டுமானால் அதைத்தான் அவர்கள் பெற முடியும். அதிமுக கொண்டு வந்த திட்டங்களின் மீது திமுக ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக உள்ளது என்று எடபாடி கூறியுள்ளார். அது பற்றிய உங்கள் கருத்து?
எந்த ஸ்டிக்கரையும் ஒட்டவில்லை. கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டங்கள் அனைத்துக்கும் முதலமைச்சர் அவர்கள் முழுக்க, முழுக்க நிதிகளை ஒதுக்கி ஊராட்சிகளுக்கு 1 ஆண்டில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு 22 ஆயிரம் கிலோ மீட்டருக்கு நிதிகள் ஒதுக்கி தமிழ்நாடு முழுக்க. கிராமப்புறங்களில் சாலைகளை மேம்படுத்தி உள்ளார். சுமார் 2 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 ஆண்டுகாலமாக பழுது நீக்கப்படாமல் இருந்த 20 லட்சம் வீடுகளை 20 ஆண்டுகாலம் யாரும் திரும்பி பார்க்காத அந்த வீடுகளை 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அண்ணா திமுக ஒரு வீடுகளை கூட பழுது பார்க்க வில்லை. 2000 கோடி நிதி ஒதுக்கி ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. பழைய வீட்டிற்கு பதிலாக புதிதாக 25 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகள் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. தேர்தல் வருகிறது என்ற காரணத்தினால் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது என எடப்பாடி யார் குற்றம் சாட்டியுள்ளார். அது பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு,
சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புதான் நிறைவேற்றுகிறார்கள் . வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் அவ்வளவுதான். தேர்தலுக்காக வழங்கப்படவில்லை எப்பொழுதும் திமுகவை பொறுத்தவரை எங்களது தலைவர் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நிரந்தரமான திட்டத்தை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்துவார்கள் .

உதாரணம் மகளிர் உதவி தொகை திட்டம் முதலில் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கினார்கள் . விடுபட்ட போனவர்களுக்கும் மீண்டும் வழங்கப்படும் எனக் கூறினார். நாளை மாலை 25 லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இப்போது உதவி திட்டம் வழங்கப்படுபவர்களை சேர்த்தால் ஒரு கோடியே 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது . மகளிர் உரிமைத் தொகை தகுதியுள்ள அனைவருக்கும் நாளை மாலை வீடு தேடி பணம் வரும் . இதிலும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் முதலமைச்சர் அவர்களுக்கு உதவிக்கரம் இட்ட தயாராக உள்ளார் என்று பேட்டியளித்தார்.





















