Video : மதுரை : நள்ளிரவில் இடிந்து விழுந்த 80 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம்.. என்ன நடந்தது?
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது - உணவகம், பழக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தது. உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது ஆறுதல்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் அமைந்திருந்த சுமார் 70, 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இன்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது, மேலும் நள்ளிரவு நேரத்தில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இங்கிருந்த உணவகம் பழக்கடை பெட்டிக் கடைகள் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து ஒவ்வொருவராக சம்பவத்தை வந்து வந்த வண்ணம் உள்ளனர்.
#மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நள்ளிரவு இடிந்து விழுந்தது - உணவகம், பழக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் சேதம். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. Further reports to follow - @abpnadu @UpdatesMadurai | @WeTamilans | @Act4madurai pic.twitter.com/LYpnjEhHmi
— Arunchinna (@iamarunchinna) June 5, 2022