மேலும் அறிய

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் வெறும் மூன்றே நாட்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர். 

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள  விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டின் இலக்கு 1 கோடி மரங்கள் நடுவது. அதில் தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியை ஈஷா வேளாண் காடுகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 37 மாவட்டங்களில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
இதன்மூலம், சுமார் 165 விவசாயிகளின் நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நட்டுள்ளனர்.  
அதன்படி மதுரை மாவட்டத்தில் பாலமேடு அருகில் உள்ள சத்திரவெள்ளாலப்பட்டியை சேர்ந்த திரு.ராமசாமி என்பவர் 1650 டிம்பர் மரங்களை நடவு செய்துள்ளார். மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கினர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
 மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களின் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (16.10.2026) இன்று தக்காளி, கத்தரிக்காய் நிலவரம் என்ன?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (16.10.2026) இன்று தக்காளி, கத்தரிக்காய் நிலவரம் என்ன?
விவசாயிகளே அலர்ட்! அக்டோபர் 22-ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
விவசாயிகளே அலர்ட்! அக்டோபர் 22-ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
கத்தரிக்காய் விவசாயிகள் கவனத்திற்கு! தண்டு, காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
கத்தரிக்காய் விவசாயிகள் கவனத்திற்கு! தண்டு, காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?
கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
Embed widget