Thaipusam 2025: நாளை தைப்பூசம்.. மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கம்..எங்கெல்லாம் நிற்கும்?
தைப் பூச சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரையில் இருந்து பழனி தைப்பூசத்திற்கு கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழா 2025
Thaipusam 2025: தமிழ்கடவுள் என்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு போற்றி வணங்கப்படும் கடவுள் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக தைப்பூசம் திகழ்கிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாடப்படுகிறது. கடந்த 5ம் தேதியே தைப்பூசத் திருவிழா காெடியேற்றப்பட்டு தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முருகப்பெருமான் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பழனி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழா சிறப்பு ரயில்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

