விடாமுயற்சிக்கு வேட்டு வைக்க பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக களமிறங்கும் 9 படங்கள்!
பிப்ரவரி 14 ஆம் தேதியான வரும் வெள்ளியன்று காதலர் தினத்தை முன்னிட்டு கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா உள்பட 9 படங்கள் வெளியாக இருக்கிறது. அந்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி 6ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூலிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், தமிழகத்தில் அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காமெடி நடிகர் கவுண்டமனியின் ஒத்த ஓட்டு முத்தையா படம் உள்பட 9 படங்கள் வெளியாக இருக்கிறது.
ஒத்த ஓட்டு முத்தையா:
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஒத்த ஓட்டு முத்தையா. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
2கே லவ் ஸ்டோரி:
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 2கே லவ் ஸ்டோரி. ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், சிங்கம்புல், ஜெயபிரகாஷ், ஜிபி முத்து ஆகியோர் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பேபி & பேபி:
இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, ஸ்ரீமன், இளவரசு, ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பேபி & பேபி. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
படவா:
கே வி நந்தா இயக்கத்தில் விமல், சூரி, கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில், ஸ்ரீதா ராவ் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் படவா. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்து கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று படவா படம் திரைக்கு வருகிறது. ஜான் பீட்டர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தினசரி:
இயக்குநர் ஜி சங்கர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, எம். எஸ் பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாந்தினி, நாவ்யா, சரத், சாம்ஸ் ராதாரவி ஆகியோரது பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தினசரி. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபேமிலி டிராமா கதையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஃபயர்:
இயக்குநர் ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயதி ஷான், சுரேஷ் சக்ரவர்த்தி, சிங்கம்புலி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஃபயர் (Fire). இந்த படத்தில் பாலாஜி பிஸியோதெரபிஸ்டாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
கண் நீரா:
இயக்குநர் கதிர் ராவென் இயக்கத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள படம் தான் கண் நீரா. வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
காதல் என்பது பொதுவுடைமை:
ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ரோகினி, வினீத், அனுஷா, தீபா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் காதல் என்பது பொதுவுடைமை (Kaadhal Enbadhu Podhu Udamai - KEPU). தன்பாலின காதல் கதையை மையப்படுத்தி இந்தப படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தன்பாலின காதலுக்கு லிஜோமோல் ஜோஸ் ஆதரவாக பேசியிருந்த பேட்டி வைரலாகி வருகிறது. இந்தப் படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார் இந்தப் படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
வெட்டு:
இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் அம்மா ராகின் ராஜ், அங்கிதா நாஸ்கர், ரோகித், எஸ்டர் நோரோன்ஹா, முக்கு அவினாஷ், சத்யம் ராஜேஷ், அஜய், விஜ்ஜி சந்திரசேகர், ராஜீவ் கனகலா, இந்திரஜா, ஸ்ரவன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஒரு சாதாரண இளைஞனின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

