மேலும் அறிய

தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

ஜெர்லின் அனிகாவிற்கு  கல்லூரி சார்பாக வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் காண காசோலையை வழங்கினார்.

மதுரை எல்.டி.சி., கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட மூன்று பதக்கம் பெற்றார். இந்திய அரசு வீராங்கனைக்கு  அர்ஜுனா விருது  வழங்கி கெளவுரவித்தது. மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ரேவதி வீரமணி, ரோஸி மீனா உள்ளிட்ட தேசிய மற்றும் உலக அளவில் விளையாடுப்  போட்டியில்  சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றினார்.

தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்..  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
 
 
மேடையில் உதயநிதி ஸ்டாலின், "அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுத்து உள்ளீர்கள். இதை எனக்கான வரவேற்பாக நான் பார்க்கவில்லை. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த வீராங்கனைகளுக்காக நீங்கள் அளித்த வரவேற்பாக நான் பார்க்கிறேன். விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து எங்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும் நான்தான் அங்கே சிறப்பு விருந்தினர். எல்லாவற்றிற்கும் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறேன். ஜெர்லின் அனிகா எக்னாமிக்ஸ் படித்தவரே விளையாட்டிலும் சாதித்து இருக்கிறார்கள் மிகப்பெரிய சாதனை.  வீரர் வீராங்கனைகளை தயார் செய்வதற்கு பயிற்சியாளர்கள் மிக முக்கியம். எங்களுடைய ஆசிரியர்கள் பேரறிஞர் அண்ணா, பெரியார்,கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின்" என்றார்

தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்..  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
 
”நிதி அமைச்சர் பி.டி.ஆர் பேசும்பொழுது, நாங்கள் வரும்பொழுது ஒரு பேராசிரியர் வருவதைப்போல பாவித்து இருப்பதாக கூறினார். ஆம் அவர் பேராசிரியர்தான் டி.வி நிகழ்ச்சிகளில் எதிரில் பேசுபவருக்கு கூட பாடம் எடுக்க கூடிய அளவுக்கு பேராசிரியராக உள்ளார்.
 
மேலும் சட்டமன்றத்தில் அவர் எழுந்து பேசத் தொடங்கினால் சட்டமன்றமே அமைதியாகும். அந்த அளவுக்கு அவர் எல்லோருக்கும் கிளாஸ் எடுப்பார். காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் 79.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில் தற்பொழுது முதல்வர் கோப்பை  காண போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 25 கோடி திட்டத்தில் அறிவிக்கப்பட்டு தற்போது 15 விதமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்..  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
 
வரும் ஜூன் மாதம்  சென்னையில்  உலகக் கோப்பை ஷ்குவாஸ் போட்டி நடைபெற உள்ளது. அதில் 8 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். அதேபோல் ஏசியன் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது . கிரிக்கெட், கால்பந்து ஆட்டத்தை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க விருப்பப்படுகிறோம். அதுவே நம் குடும்பத்தில் இருந்து ஒருவர் விளையாட சென்றால் பெற்றோர் பயப்படுகிறோம் விளையாட்டில் ஈடுபட்டால் வேலைவாய்ப்பு பொருளாதார சிக்கல் வருமோ என்று வீரர்கள் வெளியில் வரவேண்டும் விளையாட்டும் முக்கியம். இந்த அரசு கல்வி, விளையாட்டு, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது” என்றார்
 
தொடர்ந்து ஜெர்லின் அனிகா, ரோஸி மீனா , ரேவதிவை பாராட்டி விளையாட்டு துறை அமைச்சர் நினைவு பரிசு மற்றும் ஜெர்லின் அனிகாவிற்கு  கல்லூரி சார்பாக வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் காண காசோலையை வழங்கினார். அதேபோல் ஜெர்லின் அனிகாவின் பயிற்சியாளர் சரவணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget