Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
”நாம் தமிழர் கட்சியில் இருக்கும் இளைஞர் விஜயால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஈர்க்கப்படுவதை தாங்க முடியாத சீமான் இவ்வாறு பேசுவதாக அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்”

பிரசாந்த் கிஷோர் போன்ற வியூக வகுப்பாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு பெயர் தான் பணக் கொழுப்பு என்று நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயை சீண்டி பேசியுள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவதூறு வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் உடலில் கொழுப்பு கேள்வி பட்டிருப்போம், தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாத வியூக வகுப்பாளர்களை இங்கு அழைத்து வருவது என்பது பணக் கொழுப்பு என்று கூறினார். இதனை சொல்லிவிட்டு அவரே தன்னுடைய ட்ரேட் மார்க்கான சிரிப்பை வெளிப்படுத்தினார். அதோடு, பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும் என்றும் பேசிய அவர், இவற்றையெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கவில்லையென்றும் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கத்திரிக்காய் என்று சீட்டில் எழுதினால் அது விளைந்து கைகளுக்கு காயாக கிடைத்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், களத்தில் இறங்கி பயிர் செய்தால்தான் கத்திரிக்காய் கிடைக்கும் என்று களத்திற்கே விஜய் செல்லாததை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.




















