”பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது” : நிதியமைச்சர் பி.டி.ஆர்
மதுரையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் சங்கத்தின் விழாவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினாராக பங்கேற்றார். அப்போது மேடையில் பேசுகையில்..,”சுயநலத்துக்காக கொள்கை, இலக்கு என பல காரணத்திற்காக பலர் அரசியலுக்கு வருவகின்றனர். ஆனால், சமுக நீதியை நிலை நாட்டும் வகையில் அனைவரும் சமமாக பங்களிப்பு கிடைக்கும் வகையில் அரசு இயங்க வேண்டும் என்ற கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன் நான். பண ஒதுக்கீடு, திட்டங்கள் என அனைத்திலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பயன் அடைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது மதுரையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் சங்கத்தின் விழாவில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.@abpnadu @ptrmadurai pic.twitter.com/8Ehy2GCLQy
— Dheepan M R (@mrdheepan) September 4, 2022