மேலும் அறிய
Madurai: மதுரைக்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.. மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் !
திருநெல்வேலி மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் - சாலை மார்க்கமாக நெல்லை புறப்பட்டு சென்றார்.
திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
இதனையடுத்து மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இதனையடுத்து மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். pic.twitter.com/zm9wJaw8up
— arunchinna (@arunreporter92) July 17, 2023

கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அம்மன் சன்னதிக்கு சென்று மீனாட்சி அம்மனையும், சுவாமி சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தார். 45 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுசென்றார்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆளுநர் வருகை புரிந்ததையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநர் தரிசனம் முடித்து வெளியே செல்லும் வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை.
தரிசனம் முடித்த பின்னர் அவர் சாலை மார்க்கமாக விருதுநகர் ராம்கோ விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் திருநெல்வேலி புறப்பட்டு சென்று அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை திருநெல்வேலி மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மதுரை விமானநிலையம் வந்து சென்னை செல்கிறார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aadi Amavasai: ஆடி அமாவாசை: தேனி, திண்டுக்கல் ஆன்மீக ஸ்தலங்களில் குவிந்த மக்கள்Aadi Amavasai: ஆடி அமாவாசை: தேனி, திண்டுக்கல் ஆன்மீக ஸ்தலங்களில் குவிந்த மக்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி.. வீடு திரும்பியதும் மர்ம முறையில் மரணம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















