ஜூன் முதல் வாரத்தில் 500 நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையத்தை ஒரே நாளில் முதல்வர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக முதல்வர் ஜூன் முதல் வாரத்தில் 500 நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையத்தை ஒரே நாளில் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள், மதுரை அரசு நகராட்சி மருத்துவமனையில் பாலியல் புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் துணை பேராசிரியர் மீது பாலியல் புகாரை தொடர்ந்து 8 மருத்துவர்கள் கொண்ட விசா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு உறுதி செய்த பின்னர் மருத்துவமனை டீன் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரே துறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதனை அறிவுறுத்தக்கூடிய நடவடிக்கையாக இருக்கும் இது. மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
மதுரையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு.
தற்போது செவிலியர்கள் பற்றாக்குறையை நிரப்புவதற்கு தான் 4308 பணியிடங்கள் நிரப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் பணிக்காக; 1900 பேருக்கு 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதப்பட்டுள்ளது. இந்தாண்டு 4200 பேருக்கு எம்.ஆர்.வி.எம் மூலம் பணி நிறுவனம் செய்ய உள்ளது.
மதுரையில் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது இது குறித்த கேள்விக்கு.
மொத்தம் 708 மருத்துவமனைகள் உள்ளது இதில் 500 மருத்துவமனைகள் முழுமையாக பணிகள் முடிவு பெற்று உள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ,உதவி சுகாதார ஆய்வாளர்கள்,உதவியாளர்கள் என்கின்ற வகையில் பணி நியமனங்கள் செய்து வருகின்றனர். இந்த பணி நியமனங்கள் முடிவுற்ற உடனே தமிழக முதல்வர் வருகிற ஜூன் முதல் வாரத்தில் 500 மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் திறந்து வைப்பார் எனக் கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ilaiyaraaja: 'எனக்கு தலைக்கணமா? ... அதை சொல்றவனுக்கு எவ்வளவு இருக்கணும்? ‘ - நேர்காணலில் டென்ஷனான இளையராஜா..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்