மேலும் அறிய

’’நான் தகராறு செய்ய ரெடி’’..... மதுரையில் திமுகவை விளாசிய சுப்பிரமணியன் சுவாமி

நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது - சுப்பிரமணியன் சுவாமி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்தி பேசினர். இதையடுத்து மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம் தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்பர் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தோம் அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர். பாரத மாதா நம்பர் ஒன் என்று மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும் என்றார். கருணாநிதி என்னிடம் பேசும் போது திராவிடா என்று கூறினார். அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன் அது சமஸ்கிருதம் என்று கூறினேன். உங்களின் பெயரில் 40% சமஸ்கிருதம் என்று அவரிடம் விளக்க நூலை வைத்து விவரித்தேன். அதேபோல் உதயசூரியன் என்ற உங்கள் கட்சியின் பெயரும் சமஸ்கிருதம் தான் என்றும் கூறினேன். சங்கராச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தை எடுத்துச் சென்று அனைவரையும் தோற்கடித்தார். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிடா என்பதில் திராவிட என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள் இது திராவிடமாக மாறியது. நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது.

’’நான் தகராறு செய்ய ரெடி’’..... மதுரையில் திமுகவை விளாசிய  சுப்பிரமணியன் சுவாமி

ராம் சேது திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்த போது நான் அவரை எதிர்த்தேன் அதற்கு யார் ராமர் என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் அவர் உடல் நலம் குன்றி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான் அவருக்கு "கெட் வெல் சூன்" ராமர் யார் என்று தெரிகிறதா என்று கூறினேன். தமிழன் மூளையில் நம்பர் ஒன்னாக இருக்கிறான்.ஆனால் தைரியம் இல்லை. என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என்று வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். புதிய தமிழனை உருவாக்க வேண்டும் ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை. தி.மு.க.,வின் செயலாளர் ராஜீவ் காந்தி மோசமாக பேசி வருகிறார். அது தொடர்பாக வழக்கு ஒன்றை கொடுத்துள்ளேன் விரைவில் அவர் சிறைக்கு செல்வார்.

’’நான் தகராறு செய்ய ரெடி’’..... மதுரையில் திமுகவை விளாசிய  சுப்பிரமணியன் சுவாமி

தி.மு.க., தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும். கம்பராமாயணத்தை எழுதிய வால்மிகியும் ஒரு செட்டியூல் காஸ்ட் தான். ஆனால் அவரின் தாய் தந்தை பிராமணராக இருந்தவர்கள். யாராவது தகராறு செய்ய தயாராக இருந்தால் நானும் தகராறு செய்ய தயாராக இருக்கிறேன். எல்.டி.டி - அடிப்பட்டு தமிழ்நாட்டில் சிகிச்சையளிக்க கூடாது அப்படி அளித்தால் ஆட்சிக்கலைப்படும் என்றேன். ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என கருணாநிதி என்னிடம் கூறினார்.  1991-ம் ஆண்டு ஜனவரி - 31 ல் ஆட்சி கலைந்தது. ஆனா ஒரு சைக்கிள் கூட எரியவில்லை. அடுத்த 2 மாத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர்  தமிழில் பெயரை வைக்கவில்லையே எங்கிருந்து வைத்தார். ரஷ்யன் பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு. கட்டாயம் என்று நான் கூறவில்லை இந்தியை கற்றுக் கொள்ள விரும்புவர்களை  ஏன் தடை போடுகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்புகிறேன்.

’’நான் தகராறு செய்ய ரெடி’’..... மதுரையில் திமுகவை விளாசிய  சுப்பிரமணியன் சுவாமி

பெரியார், பெரியார் என்று கூறுபவர்கள் இன்று பெரியார் இருந்திருந்தால் இன்று திமுக இருந்திருக்காது. பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி கோயிலை முறையாக பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார். இது  கி.வீரமணிக்கு தெரியுமா? அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார். கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என போடப்பட்டது. வெள்ளைக்காரன் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் தான். நமது சட்டப்படி எந்த கோயிலையும் அரசு எடுத்துக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. தமிழ் நாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில் திமுக அரசு கையில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்..ஆனா எல்லா கோயிலையும் கையில் எடுத்து அர்ச்சகர் நியமிக்கிறார்கள்.  எல்லா கோயிலையும் மீட்டெடுத்து பூசாரி கையில் கொடுப்பேன். தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி பணியாற்ற உள்ளேன். எல்லோரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget