மேலும் அறிய
Advertisement
Southern Railway ; திருச்செந்தூர் - திருநெல்வேலி கந்த சஷ்டி சிறப்பு ரயில் !
இந்த சிறப்பு ரயில்களில் 9 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்க நல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றனர். சஷ்டி விரத பலன்கள் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். இப்படியான திருவிழா மிக முக்கியமானது. கந்த சஷ்டியில், சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கோயிலில் மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த விழாவிற்காக லட்சக்கணக்கான மக்கள் பால்குடம், காவடி எடுத்து வருவார்கள். இந்நிலையில் திருச்செந்தூர் - திருநெல்வேலி கந்த சஷ்டி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழா தெற்கு ரயில்வே ஏற்பாடு
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06732) திருச்செந்தூரிலிருந்து நவம்பர் 7 அன்று இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
பொது பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைப்பு
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06731) திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 7 அன்று இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு நவம்பர் 8 அன்று நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்க நல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 9 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Chinmayi : ராமன் ஒரு மோசமான புருஷன்..பாடகி சின்மயி கருத்திற்கு இந்துத்துவ அமைப்புகள் கண்டனம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Silambarasan : எஸ்.டி.ஆர் ஃபோட்டோஷூட்டில் சிம்பு...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion