மேலும் அறிய
Madurai crime: தொல்லை கொடுக்கும் குரங்கு குல்லா கொள்ளையர்கள் - அச்சத்தில் மதுரை மக்கள்
மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி: குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி
நான்கு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சி
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இங்கு மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. காலி வீட்டுமனை நிலம் மற்றும் கட்டுமானம் நடக்கும் கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட ராம்கோ நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து நான்கு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
ஒரு வீட்டின் கதவை முகமூடி கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்தபோது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ரவி கூச்சல் போட்டதோடு பக்கத்து வீட்டிற்கு போன் செய்ததும் தெருவில் பக்கத்துவீட்டார்கள் கதவை திறந்து வரும் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் தப்பித்து ஓடினர். அவர்கள் கதவை உடைக்கும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து சுற்றுவட்டார பகுதிகளில், வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் மற்றும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இங்கு அதிக அளவில் போலீசார் போட்டு கண்காணிக்க வேண்டும் அல்லது ஒரு புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது தங்களது பிரதான கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion