Silambarasan : எஸ்.டி.ஆர் ஃபோட்டோஷூட்டில் சிம்பு...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் எஸ்.டி.ஆர் 49 படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது

எஸ்.டி.ஆர் 49
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்க இருந்தார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இருந்தது. ஏற்கனவே கமல் தக் லைஃப் படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் படத்தையும் தயாரித்து உள்ளதால் எஸ்.டி.ஆர் 48 படத்திற்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. தற்போது அமரன் படத்தின் ரிலீஸ் மற்றும் அதன் மூலம் வரும் வெற்றியை பெரிதும் சார்ந்திருக்கிறது ராஜ்கமல் ஃபிலிம்ஸ். மிகப்பெரிய வரலாற்றுத் திரைப்படமாக பாகுபலி ஸ்டைலில் இப்படம் உருவாகும் என கூறப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கு என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு
ஓ மை கடவுளே மற்றும் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தை இயக்கிவரும் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 49 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். இதனை அறிவிக்க படக்குழு 90 கிட்ஸ்களை கவர்ந்த சிம்பு ஸ்டைலில் ஒரு போஸ்ரை வெளியிட்டது. தற்போது வரை கதை , இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமே உறுதிசெய்யப் பட்டிருப்பதாகவும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த படத்தை இயக்கவிருக்கிறார். ஏஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு வல்லவன் , மன்மதன் படத்தில் வந்த சிம்புவை இந்த படத்தில் பார்க்கலாம் என படக்குழு பயங்கரமாக ஹைப் கொடுத்துள்ளது. அதற்கேற்றபடி ரசிகர்கள் தினமும் அப்டேட் கேட்டு வருகிறார்கள். இதனால் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரு சிறிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டருக்கு எடுக்கப்பட்ட ஃபோட்டோஷூட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

