மேலும் அறிய

சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!

பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் தென்னிந்திய இரும்புக்காலப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படுகின்றன.

சிவகங்கை அருகே பிரவலூரில் கல்வட்டம் மற்றும் ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு.

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டது
 
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகில் உள்ள பிரவலூர் கிராமத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கிராமத்தைச் சேர்ந்த அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் பிரவலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அஜய் மற்றும் அவரது நண்பர்கள் மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா கள ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.."
 
கல் மற்றும் கல் குவியல் அமைக்கப்பட்டது.
 
"பிரவலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில், கடம்பன் குடி கண்மாய்க்கு தெற்குப் பகுதியில் பரந்துவிரிந்த ஒரு மேட்டுப்பகுதியும் அதன் அருகில் வறண்ட நிலையில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அங்கு மேற்பரப்பில் ஏராளமான கல்வட்டங்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன. மண் அரிப்பு காரணமாக பெரும்பாலான  ஈமத்தாழிகள் வெளியில் நன்கு தெரிகின்றன. மேலும் அதிகமான கல்வட்டங்களும், இரண்டு குத்துக்கற்களும்  காணப்படுகின்றன. மேலும் ஆங்காங்கே உடைந்த கருப்பு–சிவப்பு நிறப் பானை ஓடுகளும், இரும்புக் கசடுகளும், குவார்ட்ஸ் வகைக் கற்களும் காணப்படுகின்றன. இவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளைப் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். ஏனெனில், பெருங்கற்காலத்தில் மனித எலும்புச் சிதைவுகள் மற்றும் கல்லறைப் பொருட்கள் பெரிய மண் பானைகளில் வைக்கப்பட்டு மூடியால் மூடப்படும். சில நேரங்களில் அதன் மேல் கல் மற்றும் கல் குவியல் அமைக்கப்பட்டது.
 
ஈமச்சின்னங்கள்
 
கல் திட்டை என்ற டால்மென், குழி அடக்கம், பானை அடக்கம் எனப்படும் முதுமக்கள் தாழி, சர்கோபகஸ் என்ற ஈமப்பேழை, பாறை வெட்டுக் கல்லறை, குடைக்கல் மற்றும் தொப்பிக்கல், மென்ஹிர் என்ற குத்துக்கல், ஆந்த்ரோமார்பிக் எனப்படும் மனித உருவக் கற்சிலை, கல்வட்டம் மற்றும் கற்குவை எனப் பல வழிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட ஈமச்சின்னங்கள் உள்ளன. இப்படித் தொன்மையான பெருங்கற்படைச் சின்னங்கள் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கானவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், மயிலாடும்பாறை போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் தென்னிந்திய இரும்புக்காலப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படுகின்றன.
 
இரும்பை உருக்கிக் கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம்.
 
இங்கும் இரும்பை உருக்கிக் கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் பிரவலூரில் உள்ள இப்பகுதியில் இரும்புக் கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிக்கு அருகிலேயே பெருங்கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது.  இவை குறித்து சிவகங்கை மாவட்டத் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் விரிவான ஆய்வு செய்வதன்மூலம் மேலும் அதிக தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget