மேலும் அறிய
Advertisement
Southern Railway: அன்ரிசர்வ் பெட்டிகளிலும் இனி ஜாலியா போகலாம்! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் !
ஜனவரி இறுதி வாரம் முதல் சில இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு நான்கு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
ஒன்று அல்லது இரண்டு பெட்டிகளுடன் மொத்தம் நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
பிற பயணங்களைவிட ரயில் பயணம் மிகவும் செளகரியமாக இருப்பதாக பலரும் உணர்கின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பு பயணங்களுக்கு ரயிலையே முதல் சாய்ஸாக வைத்துக் கொள்கின்றனர். பல நேரங்களில் ரயில் படுக்கை பெட்டிகள் காலியாக இருந்தாலும் முன்பதிவில்லாத பெட்டிகள் கூட்ட நெரிசலாகவே இருக்கும். இந்த சூழலில் அன்ரிசர்வ் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம், படுக்கை வசதி பெட்டி குறைத்துவிட்டு, ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் கழிப்பறை அருகே குத்தவைத்து செல்லும் அவலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வார்கள். இரண்டு அல்லது மூன்று முன்பதிவில்லாத பெட்டியுடன் பயணிக்கும் தொலை தூர ரயில்களில் கூட்ட நெரிசலில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் முதல் இரண்டு அல்லது மூன்று முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் உள்ள ரயில்களில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பெட்டிகளுடன் மொத்தம் நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ரயில்கள் லிஸ்ட் இதோ
அதன்படி திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயிலில் (16343) ஜனவரி 20 முதல் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டு மொத்தம் நான்கு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஜனவரி 21 முதல் நான்கு முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும். இதேபோல திருநெல்வேலி - மேற்குவங்க புரூலியா விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ஜனவரி இறுதி வாரம் முதல் நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும். பாலக்காடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு, புதுச்சேரி - கன்னியாகுமரி - புதுச்சேரி, விழுப்புரம் - கரக்பூர் - விழுப்புரம், புதுச்சேரி - மங்களூர் - புதுச்சேரி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம், திருவனந்தபுரம் வடக்கு - நீலாம்பூர் - திருவனந்தபுரம் வடக்கு, மைசூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் காவிரி விரைவு ரயில், ஆலப்புழா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா, திருவனந்தபுரம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், ஹைதராபாத் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத், ஈரோடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் ஆகிய ரயில்களிலும் ஜனவரி இறுதி வாரம் முதல் சில இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு நான்கு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் களைகட்டிய புறா சந்தை.. குதூகலமாக குவிந்த வளர்ப்புப் பிராணி பிரியர்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion