மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில!
ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதை தாயார் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் பிரான்சிஸ் எபினேசர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1. தென் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 15 ஆயிரத்து 869 குழந்தைகள் பிறந்துள்ளது, என ஆர்.டி.ஐ தகவல் கிடைத்துள்ளது.
2.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.
3. மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவிலில் பல்வேறு சேவை மற்றும் கடைகளுக்கான பொதுஏலத்தில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.
4. சிவகங்கை மாவட்டம் கீழடியில்-7ம் கட்ட அகழாய்வுப் பணியின் தொடர்சியான அகரத்தில் புகைப்பட ஆவணப்பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்துடன் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5. உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக்கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
6.ராமேஸ்வரம் அருகே வீட்டிற்குள் பதுக்கி வைத் திருந்த நாட்டு துப்பாக்கி, கஞ்சாவை போலீசார் பறி முதல் செய்து, ஒருவரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
7. மதுரை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்லவிருந்த பதினாறு கன்னியாகுமரி மீனவர்களிடம் இருந்து தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் மதிப்பு12.80 லட்சம் ஆகும்.
8. மதுரையில் அலைபேசியில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதை தாயார் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் பிரான்சிஸ் எபினேசர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் விளையாட்டு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்ப கத்தால் பழமை ஆறுகள் மீட்டெடுக்கப்பட்டு ஒரு கோடி மக்களின் நீராதாரம் பூர்த்தி செய்யப்படும், என புலிகள் காப்பக கள இயக்குநர் தீபக் பில்கி கூறினார். ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த புலிகளுக்கான இந்தியா விழிப்புணர்வு விழாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
10. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் 12 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32762ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32006-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 637 இருக்கிறது. இந்நிலையில் 119கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய மதுரை மண்டல கொரோனா அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் -மதுரையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு; சிவகங்கையில் 16 பேர்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion