மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில!
மதுரையில் நேற்று பிற்பகல் மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது
1. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழையின்மையாலதேனி கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவியில் சில தினங்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3. துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா விழாவை பாரம்பரிய முறைப்படி கடற்கரையில் நடத்த தாக்கலான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
4. குற்ற வழக்கில் விடுவிப்பதாக கூறி ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி வழக்கறிஞர் கார்த்திக்கிற்கு 6 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. பி.ஜே.பியின் ஊது குழலாக சீமான் உள்ளார், என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.
6. திருநெல்வேலி, வடக்குதாழையூத்தில் கல்குவாரி குட்டையில் குளித்த சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7. மதுரையில் நேற்று மதியம் மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
8. மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் நவராத்திரி விழா 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. நாள்தோறும் ஒவ்வொரு அலங்காலரத்தில் அம்மன் மற்றும் சுவாமி எழுந்தருள்வர்.
9. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு அடுத்த கட்ட விசாரணை - அக்டோபர் - 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர், என்பது குறிப்பிடதக்கது.
10. தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43450ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42844-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 517 இருக்கிறது. இந்நிலையில் 89 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion