மேலும் அறிய
கிழக்கு சீமையை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்; தங்கை திருமணத்தில் அண்ணன் அளித்த பரிசுகள்..!
நண்பர்களின் ஜல்லிக்கட்டு காளையையும் அழைத்து வரச்சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ள வைத்துள்ளார்.
![கிழக்கு சீமையை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்; தங்கை திருமணத்தில் அண்ணன் அளித்த பரிசுகள்..! sivagangai The brother who gave pets in his younger sister's wedding TNN கிழக்கு சீமையை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்; தங்கை திருமணத்தில் அண்ணன் அளித்த பரிசுகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/cf3283f628732c65ef7ed1a73491701a1670821055511184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜல்லிக்கட்டு காளையுடன் புதிய தம்பதி
எலைட் திருமணங்களில் சொகுசு கார்கள், பங்களா, ரியல் எஸ்டேட் நிலங்கள் என தங்களது வசதிக்கு தகுந்தவாறு திருமண பரிசுகள் வழங்கி குடும்பதினர் தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்கையின் திருமணத்திற்கு நாட்டின செல்லப்பிராணிகளை பரிசாக வழங்கியுள்ளார். இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![கிழக்கு சீமையை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்; தங்கை திருமணத்தில் அண்ணன் அளித்த பரிசுகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/4b4414261c876c262fbc0bf81b7b3af51670820768130184_original.jpeg)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராயல் என்ற இளைஞர். இவருக்கு ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டின நாய்கள், சண்டைக் கிடா, சண்டைக் கோழி என நாட்டு ரக செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் இஷ்டம். இதனால் தனது வீட்டில் பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் ராயல் வேலை கிடைத்து பணிக்கு செல்லவே செல்லப்பிராணிகளை சரிவர வளர்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
![கிழக்கு சீமையை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்; தங்கை திருமணத்தில் அண்ணன் அளித்த பரிசுகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/2e1559f20fe3057a307944e1e40400441670820729876184_original.jpeg)
இதனால் முறையாக வளர்க்க முடியவில்லை என செல்லப்பிராணிகளை விற்பனை செய்துவிட்டார். இந்த சூழலில் அவரது சகோதரி விரேஷ்மா செல்லப்பிராணிகளை அண்ணன் விற்பனை செய்ததால் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்ட அண்ணன் ராயல் தனது தங்கை விரேஷ்மா திருமணத்திற்கு சண்டை கிடா, சண்டைக் கோழி, கன்னிரக நாய்களையும் வழங்கி நெகிழ்ச்சியடைய செய்தார்.
![கிழக்கு சீமையை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்; தங்கை திருமணத்தில் அண்ணன் அளித்த பரிசுகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/080ef246b1f2674c7b500fbf19cffe6d1670820809361184_original.jpeg)
மேலும் தனது நண்பர்களின் ஜல்லிக்கட்டு காளையையும் அழைத்து வரச்சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ள வைத்துள்ளார். இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செல்லப்பிராணிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விரேஷ்மா - தனசேகரன் தம்பதி இளைஞர் ராயலுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "திருவள்ளுவராக மாறிய ரஜினிகாந்த்.." பாசக்கார மதுர ரசிகர்கள்..! அரசியலுக்கு அழைக்கும் போஸ்டரால் பரபரப்பு..
மேலும் செய்திகள் படிக்க - மதுரை மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3000க்கு விற்பனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion