மேலும் அறிய
Advertisement
"திருவள்ளுவராக மாறிய ரஜினிகாந்த்.." பாசக்கார மதுர ரசிகர்கள்..! அரசியலுக்கு அழைக்கும் போஸ்டரால் பரபரப்பு..
வாழும் வள்ளுவரே என ரஜினிகாந்தை திருவள்ளுவராக சித்தரித்து புதுகுரல் எழுதி ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்தின் பிறந்தநாள் நாளை (டிசம்பர் 12ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தமிழகம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகரில் வித்தியாசமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில், வாழும் வள்ளுவரே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் உடன் ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்த வாரு அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர் என்று புதுகுரல் எழுதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல் தமிழகத்தினை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு ! என்ற வார்த்தைகளுடன் ரஜினி ரசிகர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கோடிகளை குவிக்க ஒரு விளம்பரங்களில் கூட நடிக்காதவன் நீ.. தேடி வந்த உயர் பதவிகளை விரும்பாதவன் நீ.. இதுவே தமிழகத்தினை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு..!"
ஆயிரம் அதிசயம் அமைந்தது உன் ஜாதகம் என இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் கூறிய வார்த்தைகளுடன் , ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்பது போன்ற வசனங்களுடன் , ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களை குருவாகவும் ரஜினி ரசிகராகிய தன்னை சிஷ்யனாகவும் மதுரையை சேர்ந்த பாலசந்தர் என்ற ரஜினி ரசிகர் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
மதுரையில் ரஜினி ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்https://t.co/wupaoCzH82 | #Rajinikanth #Rajini #Madurai @rajinikanth pic.twitter.com/S6Wkjf82y9
— ABP Nadu (@abpnadu) December 10, 2022
மதுரை என்றாலே எதிலும் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள் என்றும் போஸ்டர்கள் மூலம் மதுரையை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த போஸ்டர் மதுரை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion