மேலும் அறிய
செட்டிநாடு சுற்றுலா: நில உரிமையாளர்கள் & பாரம்பரிய வீடுகளுக்கு.. அறிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
விருந்தோம்பல் திட்ட மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், விருந்தோம்பல் திட்டங்களை எளிதாக்குவது மற்றும் தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.

காரைக்குடி - கானாடுகாத்தான் அரண்மனை
செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலாத் தொழில் செய்ய விருப்பமுள்ள தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவங்கள் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் அரிய வாய்ப்பு.
சுற்றுலாத் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்
சிவகங்கை மாவட்டமானது வேளாண்மை மற்றும் புவிசார் குறியீடுகளையும், புராதன மற்றும் கலாச்சாரத்தின் சூழலையும் கொண்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளூர் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. மேலும், ஆன்மீக சுற்றுலாத்தலங்கள், செட்டிநாடு சுற்றுலாத்தலங்கள் ஆகியவைகளை பிரபலப்படுத்தி, வெளிநாடுகள் மற்றும் மிகவும் வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக காலங்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாடு மற்றும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிக்கும் வகையில், சுற்றுலாத் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பு
அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரிய நகரமாக விளங்கும் கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர், புதுவயல், காரைக்குடி போன்ற செட்டிநாடு பகுதிகளில், சுற்றுலாத் தொழில் செய்ய விருப்பமுள்ள தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவங்கள் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, அதன் வாயிலாக (ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ்), சுற்றுலா, பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், விருந்தோம்பல் திட்ட மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், விருந்தோம்பல் திட்டங்களை எளிதாக்குவது மற்றும் தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
எனவே, செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலாத் தொழில் செய்ய விருப்பமுள்ள தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவங்கள் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள், தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டிற்கு இசைவு வழங்க காரைக்குடி, சுற்றுலா அலுவலரை 8939896400 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது touristofficekaraiikudi@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















