மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
உதயநிதி வருகைக்காக நடப்பட்ட கொடிக் கம்பம் - மின்சாரம் தாக்கி ஒப்பந்ததாரர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கொடி ஒப்பந்தகாரர் ஏழுமலை இறந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அதன்படி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அறிவு சார் மைய கட்டிட பணியை ஆய்வு செய்தார். சிறுகூடல்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுர கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். அதே போல் சிவகங்க ஒன்றியத்தில் இலங்கை அகதிகள் முகாம், விளையாட்டு அரங்க நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இப்படி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்காக மாவட்ட தி.மு.க.,வினர் சார்பில் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக காரைக்குடி வரும் உதயநிதியை வரவேற்பதற்காக சாலையில் இருபுறமும் தி.மு.க., கொடி கம்பங்கள் நடப்பட்டன. இந்நிலையில் நிகழ்ச்சிகள் முடிந்து உதயநிதி கிளம்பியதும் நள்ளிரவு நடப்பட்டிருந்த தி.மு.க., கொடிகம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மருதுபாண்டியர் நகர் பகுதியில் கொடி கம்பங்கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் தாக்கி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொடிக் கம்பம் நடும் ஒப்பந்ததாரர் வீரமலை (54) என்பவர் பரிதாபமாக பலியானார். மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மின்சாரம் தாக்கி கொடி ஒப்பந்தகாரர் ஏழுமலை இறந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி கொடி கம்பங்கள் நடும் போது தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவருகிறது இதற்கு அரசு முற்றுபுள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் தயாரிப்பு - 2 பேர் கைது; 400 கிலோ டீ தூள் பறிமுதல்
மேலும் செய்திகள் படிக்க - மு.க அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்த நிதி அமைச்சரின் ஆதரவாளரால் பரபரப்பு - திமுகவில் மீண்டும் முக அழகிரியின் கை ஓங்குகிறதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion