மேலும் அறிய
சிவகங்கை இலவச தையல் இயந்திரம் தகுதியானவர் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025 !
முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
சிவகங்கை மாவட்டம் தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கையின் (கோரிக்கை எண்:38) போது , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால், ”முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றிருப்பின், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரர்கள் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களாக இருத்தல் வேண்டும். மேலும், 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். முன்னாள் படைவீரர் பிறப்பால் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். படைவிலகல் சான்றில் வீட்டு முகவரி தமிழ்நாடு மாநிலம் என குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். படைவிலகல் சான்றில் தையல் இயந்திரம் கோரும் பயனாளியின் பெயர் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று மாதாகாலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றிருத்தல் வேண்டும். முன்னரே மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெற்றவராக இருத்தல் கூடாது போன்ற தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் படைவீரரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு மட்டுமே இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















