வைகை அணை பின்புறம் உள்ள விவசாயி நிலத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவலை சேகரித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
வைகை அணை பின்புறம் உள்ள விவசாயி நிலத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் தனித்தனியே கண்டெடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஜெயமங்களம் காவல்துறையினர் மண்டை ஓடு மற்றும் சிதறி கிடந்த எலும்புக்கூடுகளை சேகரித்து கொலையா? தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.
Breaking News LIVE: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் சாலையில் விவசாயம் செய்யப்படாமல் உள்ள நிலத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகள் தனித்தனியே கிடைப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் ஜெயமங்களம் காவல்துறையினர் சம்பவிடத்தை ஆய்வு மேற்கொண்டு தனித்தனியே கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் பெண் அணியும் உடை மற்றும் செருப்பு, பித்தளை செயின், ஆகியவை கிடைக்கப் பெற்றதால் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு ஒரு பெண்ணின் உடல் என முதல்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவிப்பு.
"இதுவா திராவிட மாடல் சமூகநீதி?" பாமக தலைவர் அன்புமணி கேள்விகளை அடுக்கி கேள்வி..!
மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் ஜெயமங்களம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டதா? வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவலை சேகரித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.