Breaking News LIVE: இரவு 7 மணிவரை 22 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் தகவல்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
- அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
- மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் பாரிஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்கியது
- பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயம் – பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஷட்டரிலல் துளை – வீணாகும் தண்ணீர்
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கிய தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து விலகல்
- சம்பாய் சோரன் நாளை பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்
- டெல்லியில் பேருந்தில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி
- கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி – திரளாக குவிந்த பிரியாணி பிரியர்கள்
- சோ.தர்மனின் வாழையடி கதையை அவசியம் வாசியுங்கள் – இயக்குனர் மாரி செல்வராஜ்
- ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷாவை கேலி செய்த பிரகாஷ் ராஜ்
Breaking News LIVE: இரவு 7 மணிவரை 22 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் தகவல்
Breaking News LIVE: இரவு 7 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 29, 2024
Breaking News LIVE:ஃபார்முலா 4 கார் பந்தயம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
Breaking News LIVE: சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் செப். 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காமராஜர் சாலையில், போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன் மாணிக்கவேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!
Pon Manickavel Case: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி (ஐ.ஜி) பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ தரப்பில் முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை..!
சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் அதானி..!
ஹூருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்ட, இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில், அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் அதானி.
அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 11.61 லட்சம் கோடியாக உள்ளது எனவும், 2வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.14 லட்சம் கோடியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.