மேலும் அறிய

மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை பத்தோடு பதினொன்றாக தான் பார்க்க வேண்டும் - செல்லூர் கே.ராஜூ

”அண்ணாமலை ஏன் எம்ஜிஆர் ஜெயலலிதாவை தவறாக பேசினார் என கேள்வி கேட்க வேண்டும், மோடியின் பேச்சுக்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - செல்லூர் ராஜூ தாக்கு.

செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில் " தி.மு.க., ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். ஆதாரமில்லாத விவகாரங்களை பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு போட்டு இருக்கிறார். தேவையில்லாமல் அரசை குறை கூறக்கூடாது என எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. அப்படி அறிவுரை கூறிய எடப்பாடி பழனிச்சாமி எப்படி தேவையில்லாமல் போதை பொருள் கடத்தலில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசி இருப்பார், முதல்வர் உதயநிதி மற்றும் அவரது துணைவியார் ஜாபர் சாதிக்கு உடன் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டதற்கு முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் ஜாபர் சாதித்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனவும் திமுக அயலக அணிக்கும் திமுகவுக்கும் தொடர்புமில்லை என கூறுவாரா?, திமுக மாநாட்டிற்கு ஜாபர் சாதிக் நிதி அளித்ததாக கூறப்படுகிறது, ஆளுங்கட்சியை துதி பாடுவதற்காகவா எதிர்க்கட்சி உள்ளது, ஆளும் கட்சியின் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டவே எதிர்க்கட்சி உள்ளது.

போதைப் பொருள் கடத்தல்

போதைப் பொருள் கடத்தலில் முதலமைச்சரை சிறுமைப்படுத்துவதற்காக நாங்கள் தொடர்புபடுத்தி பேசவில்லை, ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே போதைப்பொருள் தமிழகத்தில் நடமாட்டம் அதிகரித்துள்ளது என அதிமுக சுட்டி காட்டியது, அப்போதே போதைப்பொருள் கடத்தலில் திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டுமென வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் கர்நாடகா அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது எனக் கூறியதற்கு பதில் கூற வேண்டும்.

தேர்தல் ஆணையரே இன்னும் அறிவிக்கவில்லை

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடகா கூறிய விவகாரத்தில் அதிமுக ஆட்சி இருந்திருந்தால் எங்களுடைய நடவடிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும், அதிமுக குறித்து மன்சூர் அலிகான் உள்ளிட்ட யாரும் கூறி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்கும், அதிமுக கூட்டணிக்காக எந்த ஒரு கட்சியும் நேரில் சென்று அழைக்கவில்லை, கூட்டணிக்காக நேரில் வந்து பேசக்கூடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், கூட்டணி முடிவு ஆகாத நிலையில் எப்படி கருத்துக் கணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியும், கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக வெளியிடப்படுகிறது, மக்களிடமிருந்து அதிமுகவை பிரிக்க முடியாது, விலைவாசி உயர்வு மின்கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி என பல்வேறு கட்டண உயர்வினால் மத்திய அரசின் மீதும் மாநில அரசு மீதும் மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தேர்தலே அறிவிக்கவில்லை இன்னும் சொல்லப்போனால் தேர்தல் ஆணையரே இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கருத்துக்கணிப்புகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், தமிழ்நாட்டு மக்கள் மிக விவரமானவர்கள் கருத்து கணிப்புகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மத்திய அரசு நாடாளுமன்ற தேர்தலை வேண்டும் என்றே தள்ளி வைத்துக்கொண்டு செல்கிறது. ஏதோ ஒரு லாக்கிற்காக நாடாளுமன்ற தேர்தல் தள்ளி கொண்டே செல்கிறது. அதிமுக மக்களை நம்புகிறது மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், 2010 இல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிஐஏ சட்டத்தை திமுக ஆதரித்துள்ளது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிஐஏ சட்டத்திற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 வருடங்களாக எண்ணத்தை கிழித்தார்கள், இனி வெற்றி பெற்று எண்ணத்தை கிழிக்க போகிறார்கள், தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

அண்ணாமலையிடம் பேச வேண்டும்

கூட்டணி அமைக்க வலுவில்லாதவர்கள் தான் பயப்பட வேண்டும், வலு உள்ளவர்கள் ஏன் பயப்பட வேண்டும் அதிமுக தில்லாக வலுடன் உள்ளது, மோடி தமிழ்நாட்டுக்கு வருவது பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்த திட்டங்களை பிரதமர் மோடி சொல்ல வேண்டும். தேர்தலுக்காக பிரதமர் மோடி மேடைகளில் பேசி வருகிறார்.  மேடைகளில் அவ்வப்போது எம்ஜிஆர் ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசுகிறார் மோடி முதலில் அண்ணாமலையிடம் எம்ஜிஆர் ஜெயலலிதா குறித்து மோடி பேச வேண்டும். அண்ணாமலை ஏன் எம்ஜிஆர் ஜெயலலிதாவை தவறாக பேசினார் என கேள்வி கேட்க வேண்டும், மோடியின் பேச்சுக்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்து கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என ஒற்றுமையாக இருக்கக்கூடிய தமிழகத்தில் பாரதிய ஜனதாவால் தடம் பதிக்க முடியாது" என கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget