மேலும் அறிய
Advertisement
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் கொடுங்கள் - செல்லூர் ராஜூ அதிரடி
ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்லூர் ராஜூ
செல்லூர் கே.ராஜூ மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்
இன்று (01.01.2025) புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ கூறுகையில், "2025 ஆம் ஆண்டு அ.தி.மு.கவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். 2025- ஆம் ஆண்டில் விடியா அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க., முன்னெடுத்துச் செல்லும். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.
30,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது. 63 % மக்கள் வாக்களித்து உள்ளனர். 2025 ஆண்டு அ.தி.மு.கவிற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். தி.மு.க., அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
ராஜன் செல்லப்பா சாமி தரிசனம்
2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில் "பொங்கலுக்கு பின்னர் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார், ஒராண்டுக்கு முன்னரே அதிமுக மக்களை சந்தித்து பிரச்சார பயணத்தை தொடங்கவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொண்டேன். பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்" என கூறினார்.
ராஜ் சத்தியன் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் அளித்த பேட்டியில் "மீனாட்சி அம்மன் தமிழகத்தை காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை தமிழ்நாடு முதல்வர் இந்தாண்டாவது அறிவிப்பாரா?, அதிமுக தேர்தல் வெற்றிக்காக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பணியாற்றி வருகிறோம்" என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion