Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Virat Kohli: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் ஒரு முறை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டாகியுள்ளார்.
சிட்னி டெஸ்ட்:
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற கடைசி வாய்ப்பாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
இப்போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ரோகித் சர்மா மற்றும் ஆகாஷ் தீப்-க்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஓப்பனர்ஸ் சொதப்பல்:
தொடக்க ஆட்டக்காரர்களாக யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கினர், ஆனால் கே.எல் ராகுல் 4 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இந்திய அணி 19/2 என்கிற நிலையில் தடுமாறியது.
கோலி அவுட்:
விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது, உணவு இடைவெளிக்கு முன் கில் தேவையில்லாத ஷாட் ஒன்று விளையாடி 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
Virat Kohli wicket. 😞#INDvsAUS #AUSvIND #ViratKohli pic.twitter.com/mqCMNWMdA3
— Tanveer (@tanveermamdani) January 3, 2025
கோலி நீண்ட ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை தொடமலே ஆடிக்கொண்டிருந்தார், ஆனால் ஸ்காட் போலாண்ட் பந்து வீச்சில் மீண்டும் ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ஆடி ஸ்லிப்பில் நின்ற வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் விராட் கோலி. 69 பந்துகளை சந்தித்த அவர் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். முன்னதாக அவர் சந்தித்த முதல் பந்தில் கேட்ச் கொடுத்தார், ஆனால் ரிபிளேவில் பந்து தரையில் பட்டது போல் இருந்ததால் அந்த கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார்.
"100%. No denying it whatsoever."
— cricket.com.au (@cricketcomau) January 3, 2025
Steve Smith weighs in on whether he got his hand underneath the ball in the biggest moment of the morning. #AUSvIND pic.twitter.com/bqIy8iGIRm
ஆனால் கிடைத்த வாய்ப்பை கோலி பெரிய ரன்களாக மாற்றுவர் என்று எதிர்ப்பாத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.