மேலும் அறிய
Advertisement
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம் - செல்லூர் ராஜூ
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார், அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என மதுரையில் செல்லூர் கே.ராஜூ பேட்டி
மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ பேசுகையில்" மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்தன, சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை, மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் போல செயல்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2 அமைச்சர்களும் மேற் கொள்ளவில்லை.
மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது, மதுரையில் 2 அமைச்சர்களும் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம். உள்ளூரில் உள்ளவவனுக்கு சோறு போட வக்கில்லை, வெளியூர்க்காரனுக்கு பாலும், பன்னீர், பஞ்சு மொத்தை தர போகிறார்கள். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை குறைக்க வழியில்லை. உள்நாட்டு உற்பத்திக்கு உதவி செய்ய முடியவில்லை, இதில் வெளிநாடு முதலீடுகளை எப்படி கொண்டு வரப் போகிறார்கள். விஜய் நடித்த லியோ படத்துக்கு கூட்டம் குறைந்து விட்டது, ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் கீழிருந்து மேல்மட்டம் வரையிலும் கலக்சன், கரப்சன், மதுரை மாநகராட்சி செயலிழந்து போய் விட்டது, மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும், மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோவில்களின் வருவாயில் தான் சிறு கோவில்கள் செயல்படுகிறது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார், அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா?, அறநிலையத்துறையில் தவறு இருந்தால் சுட்டி காட்டலாம், யார் யாரோ ஆட்சிக்கு வர போகிறோம் என சொல்லும் போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை, 2026 ல் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக கொண்ட அதிமுக ஆட்சி அமைக்கும்" எனக் கூறினார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion