மதுரையில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு செல்லூர் ராஜூ நேரில் ஆறுதல்
எலக்ட்ரீசியன் பணிக்காக சென்று விஷவாயு தாக்கி உயிர் நீத்த சரவணகுமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டதால் மோட்டார் பழுது நீக்குவதற்காக மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் சிவக்குமார் மற்றும் கோட்டைமேடு பகுதியை சார்ந்த லட்சுமணன், மாடக்குளத்தை சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பணியாளர்களும் தொட்டியில் தவறி விழுந்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூவரையும் சடலமாக மீட்டனர்.
நேற்று இரவு சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட இரு ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ @SellurKRajuoffl |#madurai | #issues | #death | #Abpnadu | @vetridhaasan | @UpdatesMadurai | #admk @thangadurai887 #dmk ... pic.twitter.com/3qBj7u5Llt
— Arunchinna (@iamarunchinna) April 22, 2022
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்