பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பிரபலமான பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களிலும் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன்மற்றும் அழகர் கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடந்து முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
ஒட்டுமொத்த தேனி மாவட்ட மக்களுக்கும் இந்த கோவில் திருவிழாவானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாளன்று இங்குள்ள முல்லைப்பெரியாற்று தண்ணீர், புனித ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவி தீர்த்தங்களை எடுத்து தங்கள் வீட்டில் வைத்து தங்களது விரதத்தைத் தொடங்குவார். சித்திரை மாதம் தொடங்கிய முதல் வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை கொடிக்கம்பம் ஏற்றி, கொடியேற்றிய 22வது நாளில் இருந்து 8 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
“அம்பேத்காரோட மட்டுமல்ல; தேவருடனும் மோடியை ஒப்பிட்டிருக்க வேண்டும்” - இயக்குநர் பேரரசு
கொடிக்கம்பம் அத்திமரத்தில் ஆனது முக்கொம்பு மண்கலயத்தில் முல்லை ஆற்றிலிருந்து நீர் எடுத்து ஊற்றி அம்மனை தரிசிப்பது. இருபத்தொரு நாட்களும் மாவு பூஜை மட்டுமே அம்மனுக்கு நடைபெறும். அம்மனுக்கு நெய்வேத்தியமாக காப்பு அரிசி மாவு மட்டும் படைக்கப்படுகிறது. தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பக்தர்கள் அம்மனை வேண்டி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தியும் வழிபடுவார். ஆயிரம் கண் பானை சுமந்து அக்னி சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
திருவிழா தொடங்கிய வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு பூப்பல்லக்கு நிகழ்வு நடைபெறும் நாளில் திருவிழா கோலமாக காணப்படும் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில். இந்த நிகழ்வை காண வெளி மாநில பக்தர்களும் அதிகமாக வருவதுண்டு. அம்மை நோயினால் பாதித்தவர்கள் அம்மனை வேண்டி விரதம் இருந்தால் நோய் தீரும் என்பது தொன்று தொட்டு வரும் ஐதீகம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்