மேலும் அறிய
Advertisement
மூக்கையாத்தேவரின் விழாவை அரசு விழாவாக எடுப்பேன்..உசிலம்பட்டியில் சீமான் பேச்சு !
பி.கே.மூக்கையாத்தேவர் விழாவை அரசு விழாவாக எடுப்பேன் என்றும், அவர் பெயரிலும் வீரமங்கை மாயக்காள் பெயரிலும் கல்லூரி உருவாக்குவேன் என்றும் சீமான் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாப்பாபட்டியில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கும், உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மேடைக்கு உசிலம்பட்டி வீதிகளின் வழியாக நடந்தே வந்த சீமானுக்கு கள்ளர் நாடு அறக்கட்டளை மற்றும் மாயக்காள் நலச்சங்கம் சார்பில் வேல் கம்பும், வெட்டருவாள் மற்றும் புத்தக கூடையை வழங்கினா்.
தொடர்ந்து பேசிய சீமான்., பி.கே.மூக்கையாத் தேவருக்கு விழா எடுப்பது கடமைக்காக அல்ல எனது கடமைக்காக எனவும், தொடர்ந்து 6 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் இருந்து கச்சத்தீவு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் எழுப்பியுள்ளார். அவர் ஒரு சாதிய தலைவர் அல்ல சாதித்த தலைவர் எனவும்,
பி.கே.மூக்கையாத்தேவரின் விழாவை அரசு விழாவாக எடுப்பேன் அதே போன்று பி.கே.மூக்கையாத்தேவர் பெயரிலும், பெருங்காமநல்லூரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்த 16 பேரில் ஒருவரான வீரமங்கை மாயக்காள் பெயரிலும் கல்லூரிகளை உருவாக்குவேன் என்றார். மேலும் பணக்காரனுக்கோ அதிக மதிப்பெண் பெற்றவருக்கோ சீட் கிடையாது, ஏழைகளுக்கும், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் கல்வியை வழங்குவேன் என பேசினார்.
அதே போன்று வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஏன் கொடுத்தீர்கள் என கேட்க கூடாது. சீர்மரபினருக்கு 25 சதவீதம் கொடு என கேட்க வேண்டும், நான் வந்தால் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி டிஎன்டி சான்று வழங்குவேன். அதன் பின் ஆந்திரா, கர்நாடக சென்று இங்கு உள்ளவர்களுக்கு என்ன சலுகைகள் வழங்கியுள்ளேனோ அதே போன்ற சலுகைகளை எம் மக்களுக்கு வழங்க கேட்டேன். நீர்வளம், நிலவளம் என்னுடையது அதற்கு பிரச்சனை எனும் போது கேட்க ஆள் இல்லை நானாக இருந்தால் ஆளுநர் மாளிகைக்கு பூட்டு போடுவேன், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டிப்பேன் அப்போது என்னிடம் தானே வர வேண்டும், இல்லையெனில் ஆட்சியை களைப்பார்கள் மீண்டும் தேர்தல் வரும் அப்போதும் நான் தான் வெற்றி பெறுவேன் என பேசினார்., தொடர்ந்து பி.கே.மூக்கையாத்தேவரிக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளேன் என நம்புகிறேன், அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக செய்வேன் என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion