மேலும் அறிய
மதுரை மாவட்டத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்; 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவு
மதுரை சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஆஜர் - 20ஆம் தேதிவரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவு.

சவுக்கு சங்கர்
Source : whats app
யூடியூபர் சவுக்கு சங்கர்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்யும் பொழுது அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர், அதனை கைப்பற்றிய தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது கஞ்சா வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இதனடிப்படையில் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமீன் வழக்கக் கோரி சவுக்கு சங்கர் கோரிக்கை
உச்சநீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழக்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து மதுரை மத்திய சிறையிலிருந்த வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை யூட்யூப் சமூக வலைதளத்தில் பேசி வந்தார்.
சவுக்கு சங்கர் கைது
இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் போதை பொருள் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவல்
கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணையின்போது முறையாக ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட யூடியுபர் சவுக்கு சங்கருக்கு டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமலச்செல்வன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு...குறிவச்சு தாக்கும் தெலங்கானா அரசு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion