மேலும் அறிய
சவுக்கு சங்கரை வரும் 24 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய வழக்கில் வரும் 24ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

சவுக்கு சங்கர்
Source : whats app
சவுக்கு சங்கரின் மீதான கஞ்சா வழக்கின் விசாரணை ஜனவரி 27 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தும் உத்தரவு. சவுக்குசங்கரின் கஞ்சா வழக்கு நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி செங்கமலச்செல்வன் அறிவிப்பு.
சவுக்குசங்கர் கஞ்சா பிடிவாரண்ட்
பிரபல யூடியுர் சவுக்குசங்கர் கஞ்சா வைத்திருந்தாக தேனி மாவட்ட PC பட்டி காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் இருந்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு 2நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு
இதனையடுத்து நீதிமன்ற காவல் நிறைவடைந்து இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தீல் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் ஒத்திவைத்தார். இதேபோன்று இவ்வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் சவுக்கு சங்கர் ஜாமின் வழங்கும் மனு மீது டிசம்பர் 24ஆம் தேதியான திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், அதுவரை மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் சவுக்கு சங்கர் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி செங்கமலச்செல்வன் சவுக்கு சங்கருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டார்.
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் யூடியுபர் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சவுக்குசங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட பிரதான வழக்கின் விசாரணையானது, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக இதுவரை விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி செங்கமலச்செல்வன் கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















