மேலும் அறிய
Advertisement
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் - வி.வே.சசிகலா
நாம் யாரையும் தட்டிக் கேட்போம் அதை நமக்கு கொடுத்தது பெரியார், அண்ணா, ஜாதி, மதம் எல்லாம் அவர்கள் பார்த்ததே இல்லை.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக வி.கே.சசிகலா சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: மதுரையில் கடந்த ஐந்தாறு நாட்களாக அதிக மழை பெய்துள்ளது. நிறைய இடங்களில் தண்ணீர் செல்லவில்லை, தேங்கியுள்ளது. யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. செல்லூர், ஆலங்குளம் கால்வாய் வழியில் தண்ணீர் வந்தாக வேண்டும் அப்படி வந்து பந்தல்குடி கால்வாயில் கலந்து மழைநீர் வடிய வேண்டும். ஏன் வடியவில்லை எனக் கேட்டால் இந்த திமுக அரசாங்கம் வந்ததிலிருந்து, எங்குமே தூர் வாரும் முறை செய்யவில்லை. ஆரம்பத்தில் இருந்து நிர்வாகத்தை பிரித்த விதமே தவறு. அம்மா காலத்தில் ஒரு அமைச்சர் ஒரு துறையை பார்த்தபோது சரியாக இருந்தது. தற்போது ஒரு துறையை மூன்று அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுத்தது தான் முக்கிய காரணம். மொத்தத்தில் தமிழக மக்கள் திமுக அரசாங்கப் பிடியில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். நான் செல்லும் இடமெல்லாம் அதை தான் மக்கள் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு விடிவு வரும் 2026 நிச்சயமாக அம்மாவுடைய ஆட்சி வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்.
போஸ்டர்ககளை அதிமுகவினர் கிழித்தது குறித்த கேள்விக்கு:
போஸ்டர் கிழிப்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு:
யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. புரட்சித் தலைவர் முதலில் திமுகவில் இருந்த போது 6000 கூட்டத்திற்கு மேல் பேசி உள்ளார். அம்மா முதல்வராவதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார். யார் சொன்ன கருத்துக்களாக இருந்தாலும் சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது, பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும். சமூக நீதி போன்றதை எடுத்துக்கொண்டோம் அதையெல்லாம் திராவிட தலைவர்கள் செய்துள்ளார்கள். அதனால்தான் பட்டி தொட்டியில் உள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். நாம் யாரையும் தட்டிக் கேட்போம் அதை நமக்கு கொடுத்தது பெரியார், அண்ணா, ஜாதி, மதம் எல்லாம் அவர்கள் பார்த்ததே இல்லை. புரட்சித்தலைவரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தார். ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்து விட்டோம். எந்த மாநிலத்திலும் அது நடைமுறையில் இல்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. எங்கு வேண்டும் என்றாலும் சதவிதம் பேசலாம் தமிழகத்தில் மட்டும் பேச முடியாது அந்த அளவிற்கு அதை வகுத்து கொடுத்து சென்றுள்ளார் இதெல்லாம் தான் சமூக நீதி.
கட்சி ஒன்றிணைப்பது குறித்த கேள்விக்கு:
நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். அது எங்களின் வேலை.
அப்போது யார் முதல்வராக இருப்பார் என்ற கேள்விக்கு:
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான். இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது எனக் கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sellur Raju: கமல் மாதிரி இல்லாமல் விஜய் நன்றாக மிக தெளிவாக பேசினார்- செல்லூர் கே.ராஜூ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion