மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சகாய அந்தோணியை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
’’உள்ளாட்சி தேர்தலில் நடந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, தவறுதலாக திமுகவைச் சேர்ந்த ஜான் ரைட் என்பவர் என் மீது விரோதம் கொண்டு பலவித தொந்தரவுகளை தந்து கொண்டிருந்தார்’’
தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா மீதான 2 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தூத்துக்குடி சென் மேரிஸ் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறேன். பல்வேறு சமூகநல இயக்கங்களுடன் இணைந்து மீனவர்கள் வாழ்வாதார போராட்டம் உள்பட பல்வேறு சமூகநல போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளேன்.இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சனையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதேபோல் 2020ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தினேன்.இந்த இரண்டு போராட்டங்களும் கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாமல், நோயைப் பரப்பும் விதமாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் நடத்தியதாக என் மீதும் மற்றும் பலர் மீதும் தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்டம். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இது சட்ட ஒழுங்கிற்கு எதிரான போராட்டமாக கருத முடியாது. மேலும் இந்த போராட்டத்தின் மூலம் கொரோனா தொற்று பரவியது என்றும் கூற முடியாது. எனவே இந்த இரண்டு வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக சேர்த்து உள்ள அனைவரும் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறது. எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.