மேலும் அறிய

சபரிமலை: பக்தர்களுக்கு ஏற்பட்ட அவலம்! ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை வலியுறுத்தல்!

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெரிசல் காரணமாக பல பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாமல் திரும்பி உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது வருத்தமளிக்கிறது - ஓபிஎஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். இந்தத் தருணத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 41நாட்கள் விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலை நோக்கி பெரிய பாதை மற்றும் சிறிய பாதை வழியாக செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டாலும், நெரிசல் காரணமாக பல பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாமல் திரும்பி உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது வருத்தமளிக்கிறது.


சபரிமலை: பக்தர்களுக்கு ஏற்பட்ட அவலம்! ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை வலியுறுத்தல்!

இந்த ஆண்டு கேரள மாநிலம் சபரிமலையில் நடை திறக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதன் காரணமாக, பக்தர்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளாமல் திரும்பிவிட்டதாகவும், பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய திட்டமிடல் இல்லை என்றும், எட்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், பக்தர்களையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்த போதுமான காவலர்கள் இல்லை என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்கள் என 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தும், இதனைச் சரியாக கேரள அரசு முறைப்படுத்தாததன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இது ஐயப்ப பக்தர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி ஐயப்பனை காண முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் செல்வதால், அடிப்படை வசதிகளை செய்து தருவதும், வரிசையை ஒழுங்குபடுத்தி நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் அவசியம்.


சபரிமலை: பக்தர்களுக்கு ஏற்பட்ட அவலம்! ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை வலியுறுத்தல்!

இது குறித்த வழக்கினை விசாரித்த கேரள  நீதிமன்றம் தேவசம் போர்டு அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததும், அடிப்படை வசதிகள் குறித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பின்பற்றாததும் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ற தனது கவலையைத் தெரிவித்து, ஒரே இடத்தில் பக்தர்களை தேக்கி வைப்பது ஆபத்தானது என்பதால் நெரிசலைக் கட்டுப்படுத்த சிறிய குழுக்களாக பிரித்து அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தினசரி அடிப்படையில் வழங்கப்படும் உடனடிப் பதிவை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்கவும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, கேரள மாநில  முதலமைச்சருடன்  தொலைபேசியில் உடனடியாகப் பேசி, சுவாமி ஐயப்பனை காண சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கேரள  நீதிமன்ற உத்தரவின்படி போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவும், பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தி அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு  முதலமைச்சரை அதிமுக உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget