மேலும் அறிய

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் சென்றதாக கூறப்பட்ட நிலையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.  மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி

இந்த நிலையில்  நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதால் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் பயணி ஒருவருக்கு காயமும் ஏற்பட்டது. தும்பைபட்டியில் பதட்டம் ஏற்படவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். சுமார் 3 மணி நேரமாக பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் நீதி கேட்டு மாலையில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி

பாதிக்கப்பட்ட சிறுமியின் கிராமத்தில் கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று உயிரிழந்த சிறுமியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆர்.டி.ஓ முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சிறுமியின் உடல் தும்பைப்பட்டி கொண்டுவரப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் ஆறுதல் கூறிய அக்கட்சி நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தி சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் இறப்புக்கு தமிழக அரசு உரிய நீதி பெற்றுத் தரும் எனவும் தேவையான உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget